விலை இல்லை... விளைவித்த கேரட்டை பிடுங்காமல் உரமாக்கும் விவசாயிகள்

No-price-----Farmers-fertilize-the-resulting-carrots-without-plucking

விலை இல்லை... விளைவித்த கேரட்டை பிடுங்காமல் உரமாக்கும் விவசாயிகள்!!

கேரட் விலை மிகவும் சரிந்துள்ளதால் அதை பிடுங்காமல் மண்ணோடு மண்ணாக உழுது உரமாக மாற்றிவருகின்றனர் கொடைக்கானல் விவசாயிகள்.
image
image 2


Advertisement

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை போன்ற பகுதிகள் விவசாய பூமி. இங்கு கேரட், சவ்சவ்,பூண்டு போன்றவைகள் பயிரிடப்படுகின்றன.

இங்கு விளையக்கூடிய விவசாய பொருட்கள் சென்னையில் உள்ள கோயம்மேடு மார்க்கெட், கோவை மதுரை மற்றும் ஒட்டன்சத்திரம் போன்ற சந்தைகளுக்கு அனுப்பப்படும். கொரோனா பொதுமுடக்கத்தால் மார்க்கெட்டுகள் சரிவர இயங்காத நிலையில் நாளுக்குநாள் கேரட் விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
imageimage 1
இதற்குமேல் விளைந்த கேரட்டை பிடிங்கி வெளியிடங்களுக்கு அனுப்பினால் அதிகப்படியான நஷ்டம் ஏற்படும் என்பதால் கேரட்டை பிடுங்காமல் விளைந்த நிலத்திலேயே உழுது உரமாக்கி வருகின்றனர். இதனால் விவசாயிகள் தங்களின் மூன்று மாத உழைப்பு மற்றும் முதலீட்டை இழந்து பெறும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஆகவே ஆகஸ்ட் மாதம் முதல் பொதுமுடக்கத்தை முற்றிலும் நீக்கி ஒட்டுமொத்த விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement