[X] Close

மின்வாரிய ஊழியர்களை மின்கம்பத்தில் கட்டிப்போட்ட மக்கள்: தெலங்கானாவில்அதிர்ச்சி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மின்கட்டணம் வசூலிக்க வந்த ஊழியர்கள்  மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது


Advertisement

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் அலதுர்கம் காவல் எல்லைக்குட்டப்பட்ட ஒரு கிராமத்தில், மின்வாரிய ஊழியர்கள் மின் கட்டணம் வசூலிக்க வந்துள்ளனர். அதையறிந்த கிராம மக்கள் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பில்லாமல் சிரமப்படும் மக்கள் கோபமடைந்து, ஊருக்கு வந்த மின்வாரிய ஊழியர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களை மின்கம்பத்தில் கட்டிவைத்தனர்.


Advertisement

image

இதனையறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, ஊழியர்களை கிராமத்தினரிடம் இருந்து காப்பாற்றி அழைத்துவந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து  காவல்துறையினர், தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மின்வாரிய ஊழியர்களை விடுவித்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தோம். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement