"வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசக் கூடாது" எல்.முருகனுக்கு கே.எஸ்.அழகிரி பதில் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


Advertisement

முன்னதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் "தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் நடைபெற்றுள்ள மோசடி நேஷனல் ஹெரால்டு மோசடியைவிட 100 மடங்கு அதிகமானது என்றும் எனவே ரூபாய் 100 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ள இந்த மோசடிக் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்" என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கே.எஸ்.அழகிரி "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் என பேசியுள்ளார். பெருந்தலைவரின் வழியில் இதய சுத்தியோடு, ஏழைகளுக்காக, நேர்மையாக பணியாற்றுகிறது அறக்கட்டளை" என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement