மயிலாடுதுறை: மனைவி மீது சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (28 வயது). டிரைவர் வேலை செய்து வருகிறார். 


Advertisement

image

இவர் அதே பகுதியைச் சேர்ந்த அகிலா (27 வயது) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 


Advertisement

ஐயப்பன் குடிப்பழக்கத்திற்கு ஆளான காரணத்தினால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது அகிலா கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் செல்வதும் பின்னர் அவர்கள் சமாதானம் செய்து திருப்பி அனுப்புவதும் வழக்கம். 

image

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை வீட்டில் அகிலா மயக்கமடைந்து கிடப்பதாக ஐயப்பனின் குடும்பத்தார் அகிலாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த உடனே அவர்கள் சென்று பார்த்தபோது அகிலா மயங்கிக் கிடந்துள்ளார். 


Advertisement

இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 

image

தொடர்ந்து அகிலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் ஐயப்பனை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர் ‘அகிலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கயிற்றால் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்’ என ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் குத்தாலம் போலீசார் வழக்குப் பதிந்து ஐயப்பனைக் கைது செய்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement