சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி - ராம் நகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் (59 வயது). துபாயில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் துபாயிலிருந்து இந்தியா திரும்பிய இவர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். அதே விடுதியில் தங்கியிருந்த விக்னேஷ் (23 வயது) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
‘நான் சினிமாவில் உதவி இயக்குநர்’ எனச் சொல்லி விக்னேஷ் தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
உதயகுமாரின் மகனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை கூறி அவரிடம் இருந்து சுமார் பதினொன்றரை லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு சினிமா வாய்ப்பும் வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகி விட்டார்.
இதனையடுத்து உதயகுமார் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷை காவலர்கள் கைது செய்து அவரிடமிருந்து மூன்று லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
Loading More post
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!