கொரோனா சிகிச்சைக்கு பணமில்லாமல் ஐசியுவில் போராடும் டெல்லி இளம் மருத்துவர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி பி.எஸ்.ஏ மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பிரிவில் பணியாற்றிய நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் இளம் மருத்துவர் ஜோகிந்தர். இவரின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவித்த அவருடைய விவசாய குடும்பம் பற்றி அறிந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இணைந்து 3 இலட்ச ரூபாய் நிதி திரட்டி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் இப்போது பெரும் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.


Advertisement

மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தை சேர்ந்த ராஜீந்தர் சவுத்ரி என்ற விவசாயின் மகன்தான் ஜோகிந்தர் . 27 வயதுடைய இவர் டெல்லி பாபா சாகேப் அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஜூன் 27ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. தீவிரத் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் சர் கங்காராம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சைக்கான செலவுக்கு பணமில்லாமல் தவித்து வருகிறது ஜோகிந்தர் குடும்பம். இதுபற்றி அறிந்த அம்பேத்கர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் சங்கம், இவருக்காக மூன்று இலட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

image


Advertisement

 “ ஜோகிந்தரின் நிலைப்பற்றி மருத்துவர்கள் சங்கம் சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் அவர்கள் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளனர். சர்கங்காராம் மருத்துவமனையும் தொடர்புகொண்டோம். அவர்கள் “ ஜோகிந்தர் இப்போது ஐசியுவில் உள்ளார், சிகிச்சைமுடிந்தபிறகு அவருக்கு பெரிய அளவில் உதவிசெய்வோம்” என்று தெரிவித்துள்ளனர். நாங்கள் இதுவரை ஜோகிந்தரை சந்தித்தது கூட இல்லை, ஆனாலும் அவர் மிகவும் துயரமான சூழலில் உள்ளதை அறிந்தவுடன் அவருக்கு உதவி செய்ய முயற்சி செய்தோம். இதுபோன்ற நெருக்கடி காலங்கள்தான் நம்மை சகோதரத்துவத்துடன் இணைக்கிறது” என்கிறார்கள் பி.எஸ்.ஏ மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள்.

கொரோனா தடுப்பு பணியின்போது பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குக் கூட பணமில்லாமல் தவிக்கும் இளம் மருத்துவருக்கு, உதவிய மூத்த மருத்துவர்கள்தான் உண்மையிலேயே மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டு.

loading...

Advertisement

Advertisement

Advertisement