கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்த இளைஞர்கள்: காட்டிக்கொடுத்த பழைய ரெக்கார்ட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வியாபாரியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement

வேலூரில் உள்ள நேதாஜி மார்க்கெட்டில் பணிபுரிந்து வருபவர் சுப்பிரமணி. இவரிடம் நேற்று இரவு அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஒரு தங்க செயின், செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

image


Advertisement

இது குறித்து நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பழைய வழக்குகளை ஆராய்ந்துள்ளனர். அதில் சந்தேகத்திற்கிடமான தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜவகர் ராஜ்(21) மற்றும் அஜய்(21) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

image

விசாரணையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது அவர்கள்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 சவரன் தங்க சங்கலி மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் தி.மு.க பிரமுகர் ஒருவரை மிரட்டி வழிபறி செய்த வழக்கு இவர்கள் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement