அப்பா இயக்கும் படம் மூலம் சினிமாத்துறையில் கால்பதிக்கும் மோகன்லால் மகள்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மலையாள நடிகர் மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் மூலம் அவரது மகள் சினிமாவில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன


Advertisement

மலையாளம் மட்டுமின்றி தமிழ். தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருபவர் மோகன்லால். தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார் மோகன்லால். கொரோனாவால் அந்தப்படம் வெளியாகாத நிலையில் தான் ஒருபடம் இயக்கப்போவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு "ப்ரோஸ்: கார்டியன் ஆப் காமாஸ் டிரஸ்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

image


Advertisement

இந்தப் படத்திற்கு நடிகை மாளவிகா மோகனனின் தந்தை ஒளிப்பதிவாளர் என்றும், இதில் வெளிநாட்டு நடிகர்கள் பலர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் மூலம் மோகன்லாலின் மகள் சினிமாத்துறையில் கால்பதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

image

இந்தப்படத்திற்கு சென்னை சிறுவன் லிடியன் இசையமைக்கவுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே வரும் ஆகஸ்ட் மாதம் த்ரிஷியம் 2 திரைப்படத்திற்கான வேலைகள் தொடங்குவதாகவும் அதில் மோகன்லாலே நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement