சென்னை : திறந்திருந்த வீட்டில் புகுந்து நகை திருட்டு : ஒருவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அருகே அதிகாலையில் திறந்த வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement

சென்னை பழைய மகாபலிபுர சாலை, கந்தஞ்சாவாடி, சந்தோஷ் நகர் விரிவு பகுதியில் வாடகைக்கு குடியிருப்பவர் சுரேஷ்(42). இவர் கடந்த 15ம் தேதி வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அதிகாலை கழிவறை செல்வதற்காக எழுந்திருக்கும்போது வீட்டின் கதவு வெளியே தாழ்பாள் போடப்பட்டிருந்துள்ளது.

image


Advertisement

இதனால் சந்தேகமடைந்து வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் இருந்த 2.5 சவரன் தங்க நகை திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட வெட்டுவாங்கேணியை சேர்ந்த கன்முட்டிமுருகன்(21) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 2.5 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். மேலும் முருகனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement