முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் குறித்து ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறையின் வாட்சப் மற்றும் முகநூலில் பதிவிடலாம் என மதுரை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா கூறுகையில், “பொதுமக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் பேசும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளில் வரிசையில் நிற்கும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
பொது இடங்களில் யாரேனும் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தால் உடனடியாக அவர்கள் இருப்பிடத்துடன் கூடிய புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து மதுரை மாநகர வாட்சப் குற்ற முறையீட்டு எண்ணிற்கோ (83000-21100) அல்லது Madurai City Police என்ற முகநூல் பக்கத்திலோ தாராளமாக பதிவிடலாம். முகக் கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பவர்கள் மீது காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்தார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!