Advertisement

கொரோனா பாதித்தவர்களை அருவருக்காதீர்கள் – அரசு பொதுநல மருத்துவர் அட்வைஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
‘’கொரோனா பாதித்தவர்களை அரவணைப்பது நமது கடமை. அவர்கள் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு ஊக்கப்படுத்தி நம்பிக்கை கொடுப்பது நமது முக்கியப் பணி. கனவில் கூட அவர்களை அருவருக்க எண்ணி விடக்கூடாது’’ என அறிவுறுத்தியுள்ளார் அரசு பொதுநல மருத்துவரான ஃபரூக் அப்துல்லா.
 
தொடர்ந்து அவர் கூறுகையில், ‘’கொரோனா தொற்றுக்குள்ளாகி பாசிடிவ் என்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் இந்தப் போரில் ‘வீரர்கள்’. வீரர்களை அவர்களுக்குரிய மாண்புடன் நடத்திட வேண்டும்.
 
imageநிச்சயம் கொரோனா பாசிடிவ் என்று கண்டறியப்பட்ட ஒருவர் 14 நாட்களுக்குப் பிறகு வைரஸை பிறருக்கு பரப்பும் தன்மை துளியும் கிடையாது. கொரோனா தொற்று பாசிடிவ் என்ற நண்பர்கள் தங்களை ஏழு நாட்கள் மருத்துவமனை கண்காணிப்பிலும் இன்னொரு ஏழு முதல் பத்து நாட்கள் வீட்டில் தனிமையிலும் கழிக்கிறார்கள்.
 
இப்போது வரை செய்யப்படும் ஆய்வுகளின் பலனாய் கிடைத்துள்ள செய்தி யாதெனில், கொரோனா தொற்று கண்டவர் அவருக்கு அறிகுறிகள் தோன்றிய முதல் நாளில் இருந்து அதிகபட்சம் பத்து நாட்கள் வரை மட்டுமே பெரும்பான்மை நோயைப் பரப்பும் தன்மை கொண்டு இருக்கிறார்
 
இதனால் உலக சுகாதார நிறுவனம் தனது அறிவுரையில், அறிகுறிகள் கொண்ட கொரோனா தொற்று நோயாளி கட்டாயம் 13 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
இதை 10+3 வழிமுறை என்கிறோம். அதாவது பத்து நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் அறிகுறிகள் தோன்றாமல் மூன்று நாட்கள் கழிந்திருக்க வேண்டும். மொத்தம் சேர்த்தால் 13 நாட்கள்.
 
தமிழகத்தில் தற்போது 2 வாரம் தனிமைப்படுத்தும் யுக்தி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இன்னும் சிலருக்கு 14 நாட்கள் வரை கூட அறிகுறிகள் இருக்கலாம். அவர்களுக்கு அறிகுறிகள் 14வது நாள் நின்றால் அத்துடன் மூன்று நாட்களை கூட்டிக்கொள்ள வேண்டும். 14+3 = 17 நாட்கள் அவர் அவரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
ஆகவே அறிவியல் ஆய்வுகளின் படி நோய் தொற்றிய ஒருவர் அறிகுறிகள் தோன்றிய 10 நாட்களுக்கு பிறகு நோயை பிறருக்கு பரப்பும் வாய்ப்பு மிக மிக மிக குறைவு. இதற்குக் காரணம், அவருக்கு நுழைந்த வைரஸானது முதல் வாரத்தில் அவரது சுவாசப் பாதையில் பல்கிப் பெருகும். அதற்கு நமது உடல் எடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கையான எதிர்ப்பு சக்தியானது ஏழு நாட்களுக்குப் பிறகு நிலைமையை தன் கையில் கொண்டு வரும்.
 
ஏழு நாட்களுக்குப் பிறகு ரத்தத்தில் அந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஆண்ட்டிபாடிகள் தோன்றி வைரஸை செயலிழக்கச் செய்யும் அதற்குப்பிறகு வைரஸ் பல்கிப்பெருக முடியாது. ஆகவே கொரோனா தொற்று கண்டு முறையாக மருத்துவமனையில் தங்கி தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலும் தங்களை முதல் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டவர்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை
 

நோய் தரும் உடல் சிக்கலை விட, பிறர் தரும் மனச்சிக்கல் ஒரு மனிதனின் கதையை முடித்து விடப்போதுமானது. எனவே அவர்களிடம் அருவருப்பு காட்டக்கூடாது. அவர்களை அரவணைப்பது நமது கடமை. இன்று அவர் குடும்பம் தொற்றுக்குள்ளாகியிருக்கிறது நாளை நமது குடும்பம் தொற்றுக்குள்ளாகலாம். இன்று நாம் அவருடன் இருந்தால் நாளை அவர் நம்முடன் இருப்பார். இன்று நாம் அவரை ஒதுக்கினால் நாளை நாம் இன்னொருவரால் ஒதுக்கப்படுவோம். எச்சரிக்கை உணர்வு தேவை தான். ஆனால் அதற்கும் அளவுண்டு'' என்கிறார் அவர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement