‘மாணவர்களின் இண்டர்நெட் செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்’ -புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ

---Government-should-help-students-for-Online-Class-expenses----Former-Puducherry-MLA

கொரோனா அச்சுறுத்தலினால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காலவரையறை இல்லாமல் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை ஆசிரியர்கள் எடுத்து வரும் சூழலில் இண்டர்நெட் செலவுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் புதுச்சேரி உப்பளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ மனோகர். 


Advertisement

image

“கொரோனாவினால் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று கல்வி பயில முடியாத நிலை உள்ளது. கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்விகற்கவேண்டும் என்ற நடைமுறையை ஆரம்பித்துள்ளன. 


Advertisement

அதன்படி மாணவர்களும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கல்வி கற்கின்றனர். இதனால் மாணவ மாணவிகளுக்கு இண்டர்நெட் செலவு மிகவும் அதிகமாகிறது.

பிள்ளைகளின் இண்டர்நெட் செலவுக்கு பெற்றோர்கள் பணமில்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆதலால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கும் வரை அரசு சார்பில் மாணவ மாணவிகளுக்கு இண்டர்நெட் செலவுக்காக மாதம் 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Tags : InternetOnlineClassEX_MLAPuducherryPondicherryCOVID19
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement