"கறுப்பர் கூட்டம்" சுரேந்திரனுக்கு ஜூலை 30 வரை நீதிமன்ற காவல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கந்த சஷ்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு ஜூலை 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது சென்னை எழும்பூர் மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூ-டியூப் சேனலில் இந்து மதத்தை சேர்ந்த கடவுள்களையும், இந்த மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் பகிரப்படுவதாக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ‘கறுப்பர் கூட்டம்’ யூ-டியூப் சேனல் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

image


Advertisement

இதற்கிடையே கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை வேளச்சேரியில் கைது செய்தனர். இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்நிலையில் அவருக்கு வரும் 30ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement