அன்று புகழ்பெற்ற தியேட்டர்.. இன்று பார்க்கிங் ஏரியா - திண்டுக்கல் சென்ட்ரல் சினிமாவின் கதை

The-famous-theater-then-----Today-Parking-Area---The-story-of-Dindigul-Central-Cinema

பல சிறந்த படங்களை திரையிட்டு மக்களை மகிழ்வித்து வந்த திண்டுக்கல் சென்ட்ரல் சினிமா  இன்று இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறியிருக்கிறது.
 image
திண்டுக்கல் நகரில் 1936 ஆம் ஆண்டு ஜோதி டாக்கீஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட டூரிங் டாக்கீஸ் கருப்பு வெள்ளை படங்களை திரையிட்டு வந்தது. நாளடைவில் இந்த டூரிங் டாக்கீஸ் வேறொருவருக்கு கைமாற்றப்பட்டது. புதிதாக வாங்கியவர்கள் கூரை கொட்டகையை அகற்றிவிட்டு கட்டிடமாக மாற்றி பாஜிமஹால் என்று பெயர்சூட்டி தொடர்ந்து படத்தை ஓட்டிவந்தனர்.

  சிறிது காலத்திற்குப் பின்பு விற்கப்பட்ட இந்த பாஜிமஹாலை வாங்கியவர்கள் சென்ட்ரல் சினிமா என்று பெயர் மாற்றி மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன், வேட்டைக்காரன், ஒருதாய் மக்கள், பட்டிக்காட்டு பொன்னையா, நாளைநமதே, போன்ற படங்களும். தவப்புதல்வன், உத்தமபத்திரன், மனிதருள் மாணிக்கம் வசந்தமாளிகை ஆகிய நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களும். எஸ்.எஸ்.ஆர். என்.டி.ஆர். எம்.ஆர்.ராதா. முத்துராமன் போன்ற தலைச்சிறந்த நடிகர்களின் வெள்ளிவிழா கண்ட பல படங்களை திரையிட்டு வெற்றிகரமாக ஓடியது.
imageநன்றாக ஓடிவந்த சென்ட்ரல் சினிமாவை டிஜிட்டல் புயல்தாக்கி நலிவடையச் செய்தது. ஆம் டிஜிட்டல் உலகில் பல நவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக பல தியேட்டர்கள் முளைத்ததால் சென்ட்ரல் சினிமாவுக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறையத் தொடங்கியது. அனைத்து வசதிகளுடன் புதிதாக வந்த தியேட்டர்களுடன் போட்டிபோட முடியாமல் 2009ஆம் ஆண்டு மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் நடித்த தாழம்பூ படத்தோடு தனது பணியை முடித்துக் கொண்டது சென்ட்ரல் சினிமா.

 ரசிகர்களின் ஆதரவோடு முன்னணி நடிகர்கள் நடித்த பல வெள்ளிவிழாகண்ட படங்களை திரையிட்டு ரசிகர்களை மகிழ்வித்துவந்த சென்ட்ரல் சினிமா இன்று வாகனம் நிறுத்தும் இடமாக மாறி தனது பணியை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது. 


Advertisement
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement