Advertisement

ஒருமுறை பாதித்தவர்களை மீண்டும் கொரோனா பாதிக்குமா? மருத்துவர் கூறுவெதென்ன?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கிறது. இதுதொடர்பாக மருத்துவர் சென்பாலனிடம் பேசினோம்.  


Advertisement

அவர் கூறுகையில், ‘’வைரஸ்கள் மனித உடலை முதன்முறை தாக்கும் போது அந்த வைரஸ்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடல் உருவாக்கிவிடும். அம்மை நோய் ஒரு முறை மட்டுமே தாக்குவதன் காரணம் இதுவே. இந்தத் தத்துவம் தான் தடுப்பூசிகளின் அடிப்படையும் கூட. இந்த நோய் எதிர்ப்பு சக்தி சிலசமயம் நிரந்தரமாக இருக்கும். சிலசமயம் ஆண்டுகள் செல்லச் செல்ல மறைந்துவிடும்.

imageஇந்த கொரோனா தொற்றில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவர்களில் வெகு சிலருக்கு மட்டும் நோய் மீண்டும் தாக்கியுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. மகாகா ரீசஸ் வகை மனிதக் குரங்குகளில் ஆராய்ச்சி செய்து பார்த்தவரை இந்த வைரஸ் உடனடியாக மீண்டும் தாக்குவதற்கு வாய்பில்லை என்று தான் முடிவுகள் வந்துள்ளன.


Advertisement

குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் அறிகுறி ஏற்பட பல காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ரீஆக்டிவேசன் (Reactivation) - நோய் முழுமையாக சரியாகாமல் சில வைரஸ்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் நெகட்டிவ் என பி.சி.ஆர். சோதனையில் வரலாம். ஆனால் மீண்டும் தகுந்த சூழ்நிலை அமையும் போது வைரஸ்கள் பல்கிப் பெருகி மீண்டும் நோயை உண்டாக்கலாம். அதேபோல தொண்டையில் வைரஸ்கள் இல்லாத நிலையில் நெகடிவ் ரிசல்ட் வரலாம். மீண்டும் இருமல் ஏற்படும் போது வைரஸ்கள் நுரையீரலில் இருந்து தொண்டைக்கு கடத்தப்படுவதால் பாசிடிவ் வரலாம்.

திடீரென்று அதிக அளவில் நோய் சோதனைகளை மேற்கொள்ளும் போது நடைமுறைக் காரணங்களாலும் மனிதத் தவறுகளாலும் சில முடிவுகள் மாறி இருக்கலாம். இதனால் நோய் இருக்கும் போதே நெகடிவ் என அறிவிக்கப்பட்டு மீண்டும் நோய் தொற்று அதிகமாகி அடுத்த சோதனையில் பாசிடிவ் என்று வரலாம்.

இந்தக் காரணங்கள் இல்லாமலும் இரண்டாம் முறை தொற்று ஏற்பட்ட நோயாளிகள் உள்ளனர். பெரும்பாலும் கொரோனா சிகிச்சையில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு இது ஏற்பட்டுள்ளது. முதன்முறை மிகவும் குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தி அறிகுறிகள் அற்ற தொற்றாக / குறை அறிகுறி தொற்றாக (asymptomatic or mild symptomatic) நோய் வரும் போது எதிர்ப்பு சக்தி குறைவாகவே உருவாகிறது. அவர்கள் மீண்டும் உடனடியாக அதிக அளவிலான வைரஸ்கள் உடைய இடத்தில் நீண்ட நேரம் இருக்கும் போது மீண்டும் தீவிர நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


Advertisement

கிட்டத்தட்ட எட்டு மாதக் காலம் மட்டுமே இந்த வைரஸ் உடன் நமக்குத் தொடர்பு. எனவே வைரஸ் தாக்குதலின் போது ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அது நீடிக்கும் காலம் போன்றவற்றைப் பற்றி அறிய நமக்கு மேலும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. மீண்டும் இரண்டாம் முறை நோய் தொற்று ஏற்பட்டவர்கள் ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும், ரீஆக்டிவேசன், அறிகுறிகள் அற்ற தொற்று முடிந்து நோய் மீண்டும் ஏற்படுவது போன்ற  காரணங்களால் நோய் தொற்றியோரும் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகிறது’’ என்கிறார் அவர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement