வாலாட்டிய பூனை – லண்டன் பார்லிமெண்ட் கூட்டத்தில் சுவாரஸ்யம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடந்த லண்டன் பாராளுமன்ற குழு கூட்டத்தில், ஸ்காட்டிஸ் எம்.பி ஜான் நிக்கல்ஸன் வீடியோவில் பேசும்போது கேமராவுக்கு முன்பாக நின்றுகொண்டு, பூனை வாலாட்டிய சுவாரஸ்ய சம்பவம்தான் இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.   


Advertisement

image

கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே வேலை செய்வதில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு லண்டன் பாராளுமன்ற குழுவின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறைகளின் செயல்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் எம்.பி ஜான் நிக்கல்சன் பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய ரஜோ என்ற பூனை கேமரா முன்பு உட்கார்ந்துகொண்டு வாலாட்டிக்கொண்டிருந்தது.


Advertisement

 

பூனையின் வால் கேமராவை மறைத்த காரணத்தால் கமிட்டி உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உரையை தொடங்கினார் நிக்கல்சன். மீண்டும் பூனையின் வால் கேமராவின் முன்பு குறுக்கிடவே “ ரஜோ தயவுசெய்து வாலை கீழே போடு” என்று பூனையிடம் கூறிவிட்டு பின்பு தனது உரையை தொடர்ந்தார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  பல்வேறு பிரபலங்களும்கூட இந்த நிகழ்வை பகிர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒரேநாளில் உலகமெல்லாம் பிரபலமாகி இருக்கிறது முகம்கூட காட்டாத அந்த “வாலுப்பூனை”.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement