செப்டம்பரில் வெளியாகும் கொரோனா தடுப்பு மருந்து?: நம்பிக்கையளிக்கும் ஆக்ஸ்போர்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முழுமூச்சுடன் ஈடுபட்டுவருகின்றன. சில மருந்து ஆய்வுகள் மூன்றாம் கட்ட மனித சோதனையை அடைந்துள்ளன. தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி ஆய்வுகளின் முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக லான்செட் மருத்துவ இதழ் உறுதிப்படுத்தியுள்ளது.    


Advertisement

 

image


Advertisement

இந்த மருந்து கண்டுபிடிப்பு நம்பிக்கைக்குரியது என்றும், ஏனென்றால் டி-செல்கள் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும்போது, ஆன்டிபாடிகள் சில மாதங்களுக்குள் மங்கக்கூடும் என்று  தனிப்பட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கோவிட்19 தடுப்பூசியை உருவாக்குவதில் தங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆரம்பக்கட்ட மனித சோதனைகளைத் தொடர்ந்து கொடிய கொரோனா தொற்றுக்கு எதிராக இரட்டைப் பாதுகாப்பை வழங்கமுடியும் என்று குழு கண்டுபிடித்துள்ளதாக யுகே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தடுப்பூசி செலுத்தப்பட்ட இங்கிலாந்து தன்னார்வலர்களின் குழுவிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தமாதிரிகள், ஆன்டிபாடிகள் மற்றும் கில்லர் டி-செல்கள் இரண்டையும் உற்பத்தி செய்ய உடலைத் தூண்டியது என்பதைக் காட்டியதாக ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறிய ஆதாரத்தின்படி ‘தி டெய்லி டெலகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது.  புதிய மருந்தின் ஆய்வுமுடிவுகள் மிகவும் நம்பிக்கைக்குரியவை என்றாலும், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, கொரோனா தொற்றுக்கு எதிராக நீண்டகால நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் என்பதை இன்னும் நிரூபிக்கவில்லை என்று அந்த ஆதாரம்  எச்சரித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு மருத்துவ சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ள பெர்க்சயர் ஆராய்ச்சி நெறிமுறைக் குழுவின் தலைவர் டேவிட் கார்ப்பெண்டர்,  "மருந்து வெளியாகும் இறுதித் தேதிகளை  யாராலும்  சொல்லமுடியாது.  சிலநேரங்களில் விஷயங்கள் தவறாக நடக்கக்கூடும். ஆனால் எதார்த்தம் என்னவென்றால், ஒரு பெரிய மருந்து நிறுவனத்தில் பணிபுரிவதன் மூலம் அந்த தடுப்பூசி செப்டம்பர் மாதத்தில் மிகவும் பரவலாகக் கிடைக்கலாம். அதையே இலக்காக வைத்து அவர்கள் செயல்படுகிறார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement