'30 தேர்வுகளில் தோல்வியடைந்தேன்.. எவ்வளவோ அசிங்கப்படுத்தினார்கள்’ – இளம் ஐபிஎஸ் ஆதித்யா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பள்ளித்தேர்வுகளில் வெறும் 67 சதவீதம் மதிப்பெண் எடுத்தபோதும் மனம் தளராமல் போராடி ஐபிஎஸ் அதிகாரியாக மாறியுள்ளார் ஆதித்யா. யுபிஎஸ்சி தேர்வுகளிலும் மூன்றுமுறை தோல்வியடைந்தபோதும்கூட விடாது போராடி நான்காவது முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார் இவர். 28 வயது இளம் ஆதித்யா இப்போது பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் கூடுதல் எஸ்.பியாக பணியாற்றி வருகிறார்.


Advertisement

image

ஆதித்யாவுக்கு சிறுவயது முதலே ஆட்சிப்பணி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் இலட்சியம். ஆனால் அவரின் பள்ளி இறுதித்தேர்வு முடிவுகளில் இவர் பெற்ற 67 சதவீதம் மதிப்பெண் முதலில் இவரை நிலைகுலைய வைத்தது. இதுபற்றி பேசும் ஆதித்யா “ எனது பெற்றோர்கள் இருவரும் அரசுபள்ளி ஆசிரியர்கள். நானும் எட்டாம் வகுப்புவரை ராஜஸ்தான் மாநிலம், ஹனுமங்கார்க் மாவட்டத்திலுள்ள கிராமப்புற பள்ளியில்தான் படித்தேன். 2009 ஆம் ஆண்டு நடந்த பள்ளி இறுதித்தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலும், எனது இலட்சியத்தின் வேகம் மட்டும் குறையவில்லை.


Advertisement

கல்லூரி படிப்புக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு முதன் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதினேன், அதில் முதன்மை தேர்வுடன் வெளியேறினேன். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெற்றிக்கு அருகில் நெருங்கி சென்று தோல்வியடைந்துகொண்டே இருந்தேன். இறுதியாக 2017 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்றேன். இதற்கிடையே இரண்டு டஜன் அரசுப்பணி தேர்வுகளுக்கு முயன்று தோல்வியடைந்திருக்கிறேன்” என்கிறார்

வெற்றியின் மந்திரங்கள் பற்றி சொல்லும் ஆதித்யா “ கடின உழைப்பு, மன உறுதி, பொறுமை ஆகியவைதான் வெற்றி மந்திரம். நான் மிகவும் நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்தவன். பல தேர்வுகளில் தோல்வியடைந்துள்ளேன், பலருடைய விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளேன். ஆனால் எந்த நெருக்கடியான சூழலிலும் நான் என்னுடைய நம்பிக்கையை மட்டும் கைவிட்டதே கிடையாது. ஏனென்றால் என்னை போன்ற சாதாரண குடும்பங்களின் ஒரே நம்பிக்கை கல்வி மட்டும்தான். கல்வியால் மட்டுமே நம்மால் உயர்ந்த நிலைக்கு செல்லமுடியும் என்று நம்பினேன். எனது தந்தை சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்தவர், இன்று நான் அவருடைய இலட்சியத்தையும் சேர்த்து நிறைவேற்றியுள்ளேன்” என்கிறார் பெருமையுடன்

image


Advertisement

“பல ஆண்டுகள் தொடர் தோல்விகளை சந்தித்தபோது நிறைய சமூக அழுத்தங்கள் இருந்தது. உறவினர்கள், நண்பர், குடும்பத்தினர் அனைவரும் எப்போதும் நமது வெற்றி, தோல்விகளை கவனித்தபடியே இருப்பார்கள். நான் தொடர் தோல்விகளை சந்தித்தபோது எனது சமூக வலைத்தள கணக்குகளை முதலில் இழுத்து மூடினேன். பிறகு நான் யாரிடமும் தேர்வுக்கு தயாராவதை பற்றி சொல்லவே இல்லை. இந்த எல்லா நெருக்கடிகளிலும் எனது பெற்றோர்தான் எனக்கு உறுதுணையாக இருந்து என் வெற்றிக்கு பங்காற்றினார்கள்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

loading...

Advertisement

Advertisement

Advertisement