சீனாவில் மீண்டும் திறக்கப்படும் சினிமா தியேட்டர்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவத்தொடங்கிய சீனாவில் வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறக்கபடவுள்ளன. சீனாவில் கொரோனோத் தொற்றுபரவல் குறைந்துள்ள காரணத்தால் சீனத்திரைப்பட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.


Advertisement

image

சீனாவில் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் முதல் கட்டமாக தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளன. அதே நேரத்தில் சீன திரையரங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி திரையரங்குகளில் உள்ள இருக்கைகளில் 30 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் விற்க வேண்டும், ஒவ்வொரு பார்வையாளருக்கும் இடைவெளி ஒரு மீட்டர் இருக்க வேண்டும், பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும், வெப்பமானியால் காய்ச்சல் பரிசோதனை செய்தபிறகே பார்வையாளர்களை அரங்கிற்குள் அனுமதிக்கவேண்டும், டிக்கெட்கள் டிஜிட்டல் முறையிலேயெ விற்கப்பட வேண்டும் என்பன போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.


Advertisement

image

முன்னதாக கொரோனோ தீவிரமாக பரவிய காரணத்தால் சீனாவில் ஜனவரி மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் சீனாவில் கொரோனோ பரவலின் வேகம் குறைந்து வந்ததால் சினிமாத்துறையை சார்ந்தவர்களால் திரையரங்குகளை திறக்கும்படி தொடர்ச்சியான கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தன, இந்நிலையில் சீன திரைப்படத்துறை நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement