அது என்ன வாக்கிங் டெஸ்ட்? புது உத்தியை கையிலெடுக்கும் மகாராஷ்டிரா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகள், கோவிட் சிறப்பு மையங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் அங்கு கொரோனா அறிகுறி உள்ளவர்களை ஆறு நிமிட நடை பரிசோதனை மூலம் பிரித்தெடுத்து சிகிச்சைக்கு உட்படுத்துவதாக தெரிவிக்கிறார் அரசு மருத்துவர் ராதா.


Advertisement

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’இந்த நேரத்தில் நமக்கு கோவிட் நோயாளிகளை பிரிக்க உதவுவது அவர்களது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு தான். இதை வைத்து தான் இப்போது பிரித்துக் கொண்டு இருக்கிறோம்.

பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு இவர்களுடைய நுரையீரல், இருதயம் போன்றவை அறுவைச் சிகிச்சையை தாங்கும் திறன் உள்ளதா என்று பரிசோதனை செய்வதற்கு ஆறு நிமிடம் நடை பரிசோதனை செய்யப்படும்.


Advertisement

அதாவது நோயாளியை ஆறு நிமிடங்கள் நடக்க அல்லது ஓட விட்டு, அதன் பிறகு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும். இது 94 சதவீதத்துக்கு மேல் இருந்தால் இவர்களது நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்படும்.

இந்த பரிசோதனையை தற்போது கோவிட் அறிகுறி நோயாளிகளுக்கு பரிசோதிக்கபட்டது. மகாராஷ்டிராவின் வார்தாவில் உள்ள மருத்துவமனையில் இந்த ஆறு நிமிட நடை பரிசோதனை மேற்கொண்டு யாருக்கு எல்லாம் ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்திற்கு குறைகிறதோ அவர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளலாம். அவர்களை அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு பரிந்துரை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றிய ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகும் பட்சத்தில் இது போன்ற எளிய பரிசோதனைகள் இவர்களை வகைப்படுத்த உதவியாக இருக்கும்’’ என்கிறார் அவர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement