"சுஷாந்த் தற்கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்" அமித் ஷாவுக்கு நடிகை ரியா வேண்டுகோள் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பயோபிக் படத்தில் தோனியாகவே வாழ்ந்திருப்பார் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் நடிப்பால் முன்னுக்கு வந்தவர். கடந்த ஜூன் 14 அன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.


Advertisement

image

அப்போதிலிருந்தே அவரது தற்கொலைக்கான காரணத்தை அறிய சிபிஐ புலன் விசாரணை வேண்டும் என அரசியல் பிரமுகர்களும், அவரது நண்பர்களும், உறவினர்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 


Advertisement

இந்நிலையில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய பணிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

image

நட்பு ஊடகத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில் அவர் தெரிவித்துள்ளது “மதிப்பிற்குரிய அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு வணக்கம். நான் நடிகர் சுஷாந்தின் காதலி. அவர் தற்கொலை செய்து கொண்டு இன்றோடு ஒரு மாதத்திற்கு மேல் கடந்து விட்டது. எனக்கு அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையைத் தொடங்குமாறு இருகரம் கூப்பி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தற்கொலை முடிவிற்கு சுஷாந்தை தள்ளியது எது என நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என சொல்லியுள்ளார்.


Advertisement

இதற்கு முந்தைய பதிவில் அவரை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்ல உள்ளதாக மிரட்டல்கள் வருவதாகவும் பதிவு செய்திருந்தார் ரியா. 

image

இதற்கிடையில் பிஹாரை சேர்ந்த அரசியல் தலைவர் பப்பு யாதவ் நடிகர் சுஷாந்த் தற்கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கடிதம் மூலமாக வலியுறுத்தியிருந்தார். அதற்கு பதில் கடிதம் கொடுத்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அதில் சிபிஐ உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வராததால் சம்மந்தப்பட்ட துறைக்கு உங்களது கடிதத்தை அனுப்பியுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுஷாந்த் தற்கொலை குறித்த சிபிஐ விசாரணையில் சுப்பிரமணியன் சுவாமியும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.மும்பை பாந்த்ரா காவல் நிலைய அதிகாரிகள் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக ரியா சக்கரபார்த்தியிடமும் விசாரணை செய்து அவரது அறிக்கையையும் பெற்றுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement