மும்பை பிஎம்சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு பணியாக கேரளாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி கேரளா திரும்ப தொடங்கியுள்ளனர். இதுவரை 15 மருத்துவர்கள் கேரளா திரும்பியுள்ள நிலையில், இன்று மேலும் 25 மருத்துவர்கள் ஊர் திரும்ப உள்ளனர்.
நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதுபோல மும்பை மாநகராட்சியில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள காரணத்தால், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க கேரளாவிலிருந்து 40 மருத்துவர்கள் மற்றும் 35 செவிலியர்கள் கொண்ட சிறப்பு குழு ஜூன் 9-ஆம் தேதி மும்பை சென்றடைந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.
இவர்களில் சிறப்பு மருத்துவர்களின் ஊதியம் 2 இலட்சமாகவும், மருத்துவர்களின் ஊதியம் 80 ஆயிரம் என்றும், செவிலியர்கள் ஊதியம் 35 ஆயிரம் என்றும், இவர்களின் போக்குவரத்து செலவும் பிஎம்சியை சேர்ந்தது எனவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மாதம் மருத்துவர்கள் பணியாற்றியுள்ள நிலையில் இந்த மாதம் ஜூலை 5-ஆம் தேதி, ஜூலை 10, ஜீலை 13 என்று பலமுறை காலக்கெடு சொல்லியும் இதுவரை தங்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர் இம்மருத்துவர்கள்.
இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ள பிஎம்சி “ இது தொடர்பான கோப்புகள் அனுப்பட்டுள்ளது, விரைவில் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும்” என்று தெரித்துள்ளது.
Loading More post
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?