அமெரிக்காவின் மிக முக்கிய பிரபலங்களான பராக் ஒபாமா, ஜோ விடன் முதல் பில்கேட்ஸ், வாரன் பிபெட் வரை பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை மதிய அளவில் பெரும்பாலான பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன.
கணக்குகள் முடக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு பிறகு, சிலருடைய கணக்குகளிலிருந்து தவறான செய்திகள் பரவாமல் இருக்கும் நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் எடுத்தது.
அமெரிக்காவில் பிட்காயின் எனப்படும் ஆன்லைன் பண பரிவர்த்தனை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளிலிருந்து, 30 நிமிடங்களுக்குள் பிட்காயின் வழியாக நிதி அனுப்புவோருக்கு பணத்தை இரண்டு மடங்காக்குவதாக உறுதியளித்து ட்வீட் செய்யப்பட்டுள்ளன. இதனால் பிட்காயின் து சம்பந்தப்பட்ட மோசடி கும்பலுக்கும், பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் அந்த கணக்குகளை மீட்டெடுக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்