உறவுக்கார சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உறவுக்கார சிறுமியை கர்ப்பமாக்கிய 30 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Advertisement

வேலூர் அடுத்த சதுப்பேரி பகுதியை சேர்ந்தவர் எட்வின்( 30). இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணாண 9 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி 8 மாதக் கர்ப்பம் ஆக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு  உறவுக்காரரான எட்வின் வந்து செல்வது வழக்கம். அதனால் இவர் மீது எந்த சந்தேகமும் யாருக்கும் எழவில்லை. 

image


Advertisement

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் வயிற்று வலி இருப்பதாக சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். இதனால் சிறுமியை அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அதன் பின்னர் சிறுமி நடந்ததை கூறியுள்ளார். 

image

இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இச்சம்பவம் குறித்து எட்வின் மீது வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் எட்வீனை போக்சோ சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement