சானிடைசர் பயன்படுத்தியதால் அதிகரித்த இதயதுடிப்பு- குடியை விட்டவருக்கு நேர்ந்த விபரீதம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
ஆல்கஹால் கொண்ட சானிடைசரைப் பயன்படுத்திய நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட  மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்ததால் ஆல்கஹால் உள்ள சானிடைசரைப் பயன்படுத்தியதும் கடுமையான பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது.
 
image
 
43 வயதான அந்த நபர் கடந்த 3 ஆண்டுகளாகக் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் வங்கிக்குச் சென்றபோது அங்கு இருந்த சானிடைசரை பயன்படுத்தினார். இதனால் அவரது இதயத்துடிப்பு அதிகரித்தது. இதனை கண்ட அவரது மனைவி ஆரம்பத்தில் அவர் மீண்டும் மது அருந்திவிட்டதாக சந்தேகித்தார்.
 
image
 
ஆனால், அந்த சானிடைசர் பயன்படுத்தியதிலிருந்து அந்த நபருக்கு உடல் முழுவதும் சிவக்கத் தொடங்கியதுடன் குமட்டலும் ஏற்பட்டிருக்கிறது. நேரம் ஆக ஆக முகம் மற்றும் மார்புப் பகுதிகள் அதிகமாக சிவந்தவுடன் மும்பை அந்தேரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு டாக்கார்டியா(Tachycardia) என்று சொல்லக்கூடிய 100 சதவீத இதயத் துடிப்பு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஈ.சி.ஜி பார்க்கப்பட்டு ஆன்டிஅலர்ஜிக் சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த ஒருமணிநேரத்தில் சற்று குணமாகி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார்.
 
போதைப்பழக்கத்திலிருந்து விடுபட சிகிச்சை அளிப்பது குறித்து மனநல மருத்துவர் அவினாஷ் டிசோசாவை தொடர்புகொண் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் அவர் பேசியபோது, ‘’போதைப்பொருள் தடுப்பு மருந்துகள் ஒருவரை மது அருந்துவதிலிருந்து தடுக்கிறது. அந்த சமயத்தில் அவர் சிறிதளவு மது எடுத்துக்கொண்டாலும் மிக மோசமாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்’’ என்கிறார்.
 
நன்றி: Times Now
loading...
Related Tags : Alcohol Sanitizer Acute Reaction

Advertisement

Advertisement

Advertisement