பழைய லாரியை மீன்தொட்டியாக மாற்றிய காவல்நிலையம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எப்போதுமே காவல் நிலையத்தை சுற்றி எதிர்மறை எண்ணமோ அல்லது பயம் கலந்த உணர்வோ இருக்கும். காவல் நிலையத்தை அணுக மக்கள் எப்போதும் தயங்குகிறார்கள். ஆனால் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கரம்குளம் காவல் நிலையமோ பசுமையாக காட்சியளித்து. மக்களை வரவேற்கும் இடமாக மாறியுள்ளது.


Advertisement

இயற்கை காய்கறிகள் விளையும் சிறிய தோட்டமும், இரண்டு அழகான மீன் குளமும் என இந்த காவல் நிலையமே ரம்மியமான இடமாக காட்சி அளிக்கிறது. இதற்கு நன்றி கூற வேண்டுமென்றால், அந்த காவல் நிலையத்தின் சிறப்பு துணை காவல் ஆய்வாளர் டிஜே ஆல்பர்டிற்கு தான் கூற வேண்டும். இதுகுறித்து அவர் கூறுகையில்,   image

“நான் இங்கு வந்த புதிதில் காவல் நிலையத்தை சுற்றி குப்பைகள் நிரம்பியிருந்தன. மிகவும் அசுத்தமான இடமாக இருந்தது. ஆகையால் இந்த இடத்தை மாற்றியாக வேண்டும் என முடிவு செய்தேன். நான் மீனவ சமூகத்தைச் சார்ந்தவன் என்பதாலும் ஏற்கெனவே மீன் பண்ணை அமைப்பது குறித்த அனுபவம் எனக்கு இருந்ததாலும் முதலில் இதை ஆரம்பிக்க முடிவெடுத்தேன். மேலும், உபயோகமில்லாத பொருட்களை மறுசுழற்சி செய்து தோட்டத்திற்கு பயன்படுத்தும் விஷயத்தை யூடுயுப் வீடியோ முலம் அறிந்து கொண்டேன். அதனால் புதிய குளத்தை தோண்டுவதற்கு பதில் அங்கு இருந்த பழைய லாரியை குளமாக மாற்றலாம் என்ற யோசனை எனக்கு வந்தது” என்கிறார் ஆல்பர்ட்.


Advertisement

சட்டத்திற்கு புறம்பாக மண் கடத்தியதால் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த லாரி, பல மாதங்களாக இங்கு தான் நிற்கிறது. தேவையான அனுமதியை வாங்கிய பிறகு லாரியில் இருந்த மணலை எல்லாம் அகற்றிவிட்டு அதை நீர் புகாத துணியை வைத்து மூடினார். அதை குளமாக மாற்ற நீரை நிரப்பி அல்லி மலர்களையும் மீன்களையும் இட்டார்.

இந்த குளத்தில் 8 முதல் 10 வகையான அலங்கார மீன்களை வளர்க்க ஆரம்பித்தார் ஆல்பர்ட். குளத்தை மேலும் அழகாக்க, வெள்ளை தாமரைகளையும் மஞ்சள் அல்லி மலர்களையும் வளர்த்தார்.

“ஒரு வருடத்திற்கும் மேல் குளமாக செயல்பட்டு வந்த லாரி, சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இதனால் குளத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய தேவை உருவானது. காவல் நிலையத்தின் அருகில் இரண்டு குளங்களை தோண்டி அதில் அதே செடிகளையும் மீன்களையும் நிரப்பினோம். முன்பை விட பெரிய குளமாக இது இருப்பதால், மீன்களும் செழிப்பாக வளர்ந்தன” என கூறும் ஆல்பர்ட், சமீபத்தில் வேறொரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கும் தனது பசுமை மாயாஜாலத்தை பரப்பி வருகிறார்.


Advertisement

“எனது குடியிருப்பு சங்கரம்குளம் காவல் நிலையத்திற்கு அருகே தான் இருப்பதால், அங்குள்ள குளங்களை எனது மனைவி பேணி வருகிறார். இதற்கிடையில், பொன்னனியில் இயற்கை விவசாயத்தை தொடங்கியுள்ளேன். இதுவும் மிகப்பெரிய வெற்றியடையும் என நம்புகிறேன்” எனக் கூறுகிறார் ஆல்பர்ட்.          

loading...
Related Tags : kerala Fish PondKerala Copகேரளா

Advertisement

Advertisement

Advertisement