கேமரா போல வீடு.. பிள்ளைகளுக்கும் கேமராக்களின் பெயர் - தொழில்பக்தியின் உச்சம்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் உள்ள புகைப்படக் கலைஞரின் வீடு இணையத்தில் வைரலாகி வருகிறது


Advertisement

தூரத்தில் இருந்து பார்த்தால் சிறிய கேமராபோல காட்சி அளிக்கிறது ரவி ஹோங்காலின் வீடு. க்ளிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீடு
இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறிய வயது முதல் போட்டோகிராபி மீது உள்ள அதீத காதலே இப்படிப்பட்ட வீட்டினை உருவாக்க
வைத்ததாக ரவி ஹோங்கால் தெரிவித்துள்ளார். ப்ளாஷ், கேமரா, படச்சுருள் போன்ற வடிவங்களை கொண்டுள்ளது இவரது வீடு.

image


Advertisement

ஒரு ராட்சச கேமரா போல தெரியும் ரவி ஹோங்காலின் வீட்டினை யாராக இருந்தாலும் நின்று பார்த்து அதிசயித்தே செல்கின்றனர். தன் தொழில் பக்தியை வீட்டோடு நிறுத்திவிடவில்லை ரவி. தன்னுடைய பிள்ளைகள் மூவருக்கும் கேமரா நிறுவனம் தொடர்பான பெயர்களையே சூட்டியுள்ளார்.

image

பிரபல கேமரா நிறுவனங்களாக கெனான், நிகான், எப்சன் ஆகிய பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கும் சூட்டி அழகுபார்த்துள்ளார். இந்த கேமரா காதலன் ரவி ஹோங்கால். இது தான் உண்மையான தொழில்பக்தி என்றும், பிடித்த வேலை மீதான காதலுக்கு ரவி ஒரு சிறந்து எடுத்துக்காட்டு எனவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement