மரத்தில் ஏறினால்தான் நெட்வொர்க்: ஐசிசி நடுவரின் புலம்பலால் கிராமத்திற்கு கிடைத்த நன்மை!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சொந்த கிராமத்திற்கு சென்ற ஐசிசி நடுவர் ஒருவர் கிராமத்தின் நீண்டகால பிரச்னை ஒன்றிற்கு தீர்வு கண்டுள்ளார்


Advertisement

இந்திய கிரிக்கெட் நடுவர்களின் ஒருவரான அனில் சவுத்ரி ஊரடங்கிற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் உள்ள தன்னுடைய குக்கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார். ஒரு வாரம் ஊரில் இருந்துவிட்டு வரலாம் என்று நினைத்தவர் ஊரடங்கால் சிக்கிக் கொண்டார். அந்த கிராமத்தில் நெட்வொர்க் கூட கிடைப்பதில்லை. ஐசிசி நடுவர்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போன்ற பல வேலைகள் ஆன்லைனில் நடப்பதால் நெட்வொர்க் கிடைக்காமல் தவித்தார் அனில் சவுத்ரி.

image


Advertisement

நெட்வொர்க் கொஞ்சமாவது கிடைக்க வேண்டுமென்றால் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று வயல்வெளியில் உள்ள மரத்தில் ஏறினால்தான் கிடைக்கும் என்று அனில் வருத்தம் தெரிவித்தார். நடுவரின் இந்த வருத்தம் செல்போன் நிறுவனங்கள் வரை தற்போது கேட்டுள்ளன. நடுவரின் நிலையை அறிந்த செல்போன் நிறுவனம் அந்தக் கிராமத்தில் நெட்வொர்க் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது. தற்போது நெட்வொர்க் கிடைப்பதால் மாணவர்கள் ஆன்லைனில் படிக்க முடிவதாகவும், இணையம் தொடர்பான பரிவர்த்தனைகளை செய்ய முடிவதாகவும் அக்கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கு உதவி செய்த நடுவர் அனில் சவுத்ரி எங்களுடைய சூப்பர் ஹீரோ என்றும் தெரிவித்துள்ளனர்.

image

இது குறித்து தெரிவித்துள்ள சவுத்ரி, என்னுடைய நடவடிக்கை என் கிராமத்திற்கு உதவும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. இங்குள்ள மாணவர்கள் கொசுக்கடியில் வயல்வெளியில் நெட்வொர்க்கிற்காக இனி அலைய வேண்டாம். மக்கள் பலரும் பல புகார்களை என்னிடம் கூறுகிறார்கள். நான் வெறும் நடுவர் தான் என கூறிவிட்டேன் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.


Advertisement

 பைக்கில் கூடு கட்டிய சிட்டுக்குருவிக்காக வழக்கறிஞர் செய்த செயல்...!

loading...

Advertisement

Advertisement

Advertisement