மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்: மூதாட்டிக்கு மனிதாபிமானம் காட்டிய பெண் காவல் அதிகாரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த மூதாட்டிக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் அவரை வளாகத்தில் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement

மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தனது மகளுடன் சிகிச்சைக்காக வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்பட்ட அந்த மூதாட்டியை மருத்துவமனை வளாகம் வரை கொண்டு வந்த பெண் ஒப்பந்த ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து கொரோனா மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிவிட்டு மூதாட்டியை ஸ்ட்ரெச்சரிலேயே விட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.


Advertisement

சாத்தான்குளம் விவகாரம்: மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக விசாரணை

உடன் வந்த அவரது மகள் செய்வதறியாது சுமார் ஒரு மணி நேரம் அந்த மூதாட்டி உடன் அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திலேயே காத்துக்கொண்டிருந்தார். மதிய நேரம் என்பதால் மூதாட்டி பசி தாங்க முடியாமல் இருந்துள்ளார். கொரோனா அறிகுறி உடன் இருந்த மூதாட்டிக்கு அருகில் சென்று உதவ யாரும் முன்வராத அந்த நேரத்தில், சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்களை மருத்துவ பரிசோதனைக்காக சிபிஐ அழைத்து வந்தபோது பாதுகாப்பிற்காக அங்கு வந்திருந்த மதுரை அண்ணாநகர் காவல் பெண் உதவி ஆணையர் லில்லி கிரேஸ், அந்த மூதாட்டிக்கு ஆறுதல் கூறி தைரியப்படுத்தியுள்ளார்.

image


Advertisement

அதன் பின்னர் தனக்காக வைத்திருந்த பழம் மற்றும் பிஸ்கட்டுகளை மூதாட்டிக்கு வழங்கினார். மேலும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் மூதாட்டி நிலை குறித்து தொலைபேசியில் விவரங்களை தெரிவித்தார். பின்னர் மூதாட்டியின் உறவினர்கள் அவரை வாடகை ஆட்டோ ஒன்றில் அரசு கொரோனா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கொரோனா அறிகுறி கொண்ட ஒருவரை பல மணிநேரம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அப்படியே விட்டுச் சென்ற மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களின் அக்கறையற்ற செயல் காண்போரை வேதனை அடையச் செய்ததாக பலரும் தெரிவித்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement