“அடியாட்களை கொண்டு கடன் தவணை வசூலிக்கின்றனர்”: கார்-வேன் ஓட்டுநர்கள் கண்டனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா காலத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் அடியாட்களை கொண்டு கடன் தவணை தொகையை வசூலிப்பதாககோரி கார் வேன் ஓட்டுனர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கார் வேன் ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடபெற்றது. அனைத்ந்திய கார் வேன் ஓட்டுனர் நல சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமையில் இந்த போராட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

image


Advertisement

மேலும் தற்போது கொரோனா காலத்தில் கார் டாக்ஸி அனைத்தும் பாதிக்கபட்ட நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் அடியாட்களை கொண்டு கடன்
தவணை தொகை வசூலிப்பதாக குற்றம் சாட்டினர். ஊரடங்கு காலத்தில் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் தவித்து கொண்டிருக்கும் ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். சமூக இடைவெளி கடைபிடித்து ஓட்டுனர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement