[X] Close

காற்றின் மூலம் பரவுமா கொரோனா? - ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

Subscribe
Can-coronavirus-spread-through-air-

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவரின் மூச்சுக்காற்று மூலம் அந்நோய் பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

MEDRXIVE என்ற மருத்துவ இதழ் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதித்த ஒரு நபருடன் நெருக்கமான அறையில் இருந்த பலருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல மெட்ரோ ரயில், குளிரூட்டப்பட்ட உணவகம் போன்றவற்றில் நோய் பாதித்த ஒருவர் மூலம் பலருக்கு தொற்று பரவியிருக்கிறது. இதனால் சுவாச காற்று மூலமும் வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறார் வைரஸ் ஆராய்ச்சியாளர் பவித்ரா

image


Advertisement


தும்மல் இருமலின் போது வெளியேறும் நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது ஆரம்பகட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆய்வு முடிவுகளை வலுப்படுத்தும் விதமாக சுவாசக் காற்றில் இருந்து அதிவேகமாக வைரஸ் பரவுவது தெரிய வந்திருக்கிறது.

image

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து, மணிக்கு மில்லியன் வைரஸ்கள் வெளியேறும் என்பதை பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்ச் யங் என்ற ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். அத்துடன் நோயாளி வெளியிடும் சுவாசக் காற்றில் இருந்து வெளியாகும் கிருமி நோயின் நிலையை பொருத்து வேறுபட்டு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்


Advertisement

வேறு பெண்ணுடன் காரில் சென்ற கணவன் - நடுரோட்டில் மடக்கி பிடித்து தாக்கிய மனைவி - வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close