"பொறுப்புள்ள குடிமகனாக முகக் கவசம் அணியுங்கள்" - ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் பதில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொறுப்புள்ள குடிமகனாக முகக் கவசம் அணியுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.


Advertisement

திமுகவின் முன்னாள் வட சென்னை மாவட்ட செயலாளரும், அக்கட்சியின் தணிக்கை குழு உறுப்பினருமான எல். பலராமன் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனன்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது படமானது அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது அவர் முகக் கவசம் அணியாமல் இருந்தார்.

இதனிடையே அவரது ட்விட்டர் பக்கத்தில் “ முதல்வரின் குழப்பங்களால் மாநிலம் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் இது குறித்து பல்துறை வல்லுநர்களுடன் உரையாடினேன் என்றும் அவர்தம் ஆலோசனைகளை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகக் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்” என்று பதிவிட்டார்.

இந்தப் பதிவிற்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த அமைச்சர் உதயகுமார் “பொறுப்புள்ள எதிர்க்கட்சின்னுலாம் அப்புறமா பேசலாம். முதல்ல பொறுப்புள்ள குடிமகனா முகக்கவசம் மாட்டுங்க” என்று பதிலளித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement