ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: காங்கிரஸ் பிரமுகர்களின் இடங்களில் ஐடி சோதனை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் பிரமுகர்களும், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவர்களுமான சிலரின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் மீது இன்றைய நிலையில் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் முதல்வராக அசோக் கெலாட் நியமிக்கப்பட்டார். துணை முதல்வராக சச்சின் பைலட் இருக்கிறார். தொடக்கத்தில் இருந்தே இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி மிக வெளிப்படையாக இருந்து வருகிறது. ஆனால், ஆட்சிக்கு போதுமான பலம் இருந்ததால் காங்கிரஸ் கவலைப்படாமல் காலத்தை ஓட்டி வந்தது.

image


Advertisement

நேற்று தனது ஆதரவாளர்களுடன் சச்சின் பைலட் டெல்லி சென்றதில் இருந்தே அரசியல் ஆட்டம் தொடங்கிவிட்டது. அப்பொழுதில் இருந்து அரசியல் திருப்பங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், பாஜக அதனை மறுத்தது. இந்த பரபரப்புக்கு இடையே ராஜஸ்தான் முதலமைச்சருக்கு நெருக்காமனவர்களின் இடங்களில் ஐடி சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜிவ் அரோரா, தர்மேந்திர ராதூத் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் இறங்கியுள்ளதாகவும், இந்த சோதனை குறித்து ராஜஸ்தான் போலீசாருக்குக் கூட தகவல் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

image


Advertisement

ராஜிவி அரோரா நகைக்கடை அதிபர் ஆவார். டெல்லி, ராஜஸ்தான் என அவருக்கு சொந்தமான 24 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. வெளிநாடுகள் பரிவர்த்தனைகளும் வருமான வரித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி நிலவி வரும் நிலையில் முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ஐடி சோதனை நடத்தப்படுவது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement