அபிதாப் பச்சனிடம் நலம் விசாரித்த ரஜினி; ட்வீட் செய்த கமல்ஹாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு ரஜினி காந்த் நலம் விசாரித்துள்ளார்.


Advertisement

இன்று காலை பாலீவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு, அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடிகர் ரஜினி காந்தத் அவரை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்துள்ளார். மேலும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதியானது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் " அமிதாப் பச்சனும் அவரது மகனான அபிஷேக் பச்சனும் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். நான் இந்திய மருத்துவர்களை நம்புகிறேன். இருவரும் உடல் நல பிரச்னைகளை கடந்து விடுவார்கள். அவர்கள் மீண்டும் நல்ல உடல் நிலையுடன் தேறி வலம் வலம் வந்து சாதனையாளர்கள் என நிரூபிப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement