இந்தியாவில் கொரோனாவால் அதிகமாக உயிரிழந்தவர்களின் வயது விகிதம் என்ன ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனாவால் அதிகமாக உயிரிழந்தவர்களின் வயது விகிதம் என்ன ?


Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 43 சதவீதத்தினர் 30 லிருந்து 60 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மூன்றே வாரங்களில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 இடத்திற்கு வந்துள்ளது. இது வரை 793,802 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21,600 நபர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியாவில் 250,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் மேலும் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


Advertisement

image

இது குறித்து மருத்துவர் அனந்த் பன் கூறும் போது “ இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. ஊரடங்கை தளர்வு படுத்தியதிலிருந்து சின்ன சின்ன நகரங்களுக்கு கொரோனா பரவி வருகிறது. அதனால் கொரோனா குறித்த எண்ணிக்கைகள் தெரியாமல்தான் இருக்கிறது. சுகாதாரத்துறை கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட தகவலின்படி பிரேசில் மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாள்கிறது என்றும் 1 கோடி மக்களுக்கு 13 நபர்கள் மட்டுமே உயிரிழக்கிறார்கள் என்றும் கூறியிருந்தது" என்றார்.

image


Advertisement

ஆனால் உண்மை நிலவரம் அப்படியிருக்க சாத்தியமில்லை என்று கூறுகிறார் மருத்துவர் ஜெயபிரகாஷ் முலில், காரணம் பெரும்பான்மையான இடங்களில் எந்த ஒரு இறப்பு குறித்தும் முறையான அறிக்கைகள் சமர்பிக்கப்படுவதில்லை. அதிகாரப் பூர்வ அறிக்கையில் இருக்கும் தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 43 சதவீதத்தினர் 30 லிருந்து 60 வயதிற்கு உட்பட்டவர்கள். ஆனால் உலகளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி வயதானவர்களுக்கே கொரோனா அதிகம் தாக்கும் எனச் சொல்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இந்தியாவில் வயதானவர்களிடம் ஏற்படும் தொற்று பெரும்பாலும் குணமாகுவதில்லை.

loading...

Advertisement

Advertisement

Advertisement