கேரள தங்கக் கடத்தல் வழக்கு: தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூருவில் கைது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

கடந்த 5-ஆம் தேதி டிப்ளமாட்டிக் பார்சல் என்ற பெயரில் வந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் கேரள விமான நிலையத்தில் பிடிபட்டது. தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஸ்வப்னா கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடி பிரிவில் பணியாற்றுபவர் என்பதால் கேரள அரசியலில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி முற்றியது. இந்த தங்கக்கடத்தல் குறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. கேரள காவல்துறையும், சுங்கத்துறையும் ஸ்வப்னா சுரேஷை வலைவீசி தேடிவந்தனர்.

FPJ Fast Facts: 6 things to know about Kerala gold smuggling scandal  involving Swapna Suresh


Advertisement

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பெங்களூருவில் எங்கு கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளிவரவில்லை. நாளை காலை 11 மணிக்கு கொச்சினில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement