ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ 4ஜி சிம் கார்டுகளை ப்ரீ ஹோம் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.
ஃப்ரீ வாய்ஸ் கால், ப்ரீ டேட்டா என பல அதிரடி சலுகைகளுடன் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. ஜியோ-வுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வோடோஃபோன், ஏர்டெல் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன. நாளுக்கு நாள் ஜியோ சிம் கார்டை பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஜியோ சிம்கார்டை ஹோம் டெலிவரி செய்ய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 600 நகரங்களில் ஜியோ சிம் கார்டுகளை ஃப்ரீ டெலிவரி செய்ய ரிலையன்ஸ் முடிவெடுத்துள்ளது. எந்தெந்த நகரங்களில், ஹோம் டெலிவரி வசதி உள்ளது என்பதை ஜியோ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர, முக்கிய நகரங்களில் ஜியோ 4ஜி ஹாட்ஸ்பாட்டை 90 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யவும் ஜியோ முடிவெடுத்துள்ளது. புதிய 4ஜி ஹாட்ஸ்பாட்டிற்கு பழைய டாங்கிளை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது உங்களுக்கு 100 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி