‘நீங்கள் கடன் வாங்குவீர்கள்.. நாங்கள் விசாரிக்கணுமா?’ போலீஸ் அலட்சியம்.. பெண்கள் பரிதாபம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குளித்தலை அருகே தவணை பணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும் என வற்புறுத்திய தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மகளிர் குழுவினரை குளித்தலை காவல் நிலைய காவலர்கள் அலட்சியப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Advertisement

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நெய்தலூரில் வசிக்கும் பெண்கள் சிலர் பெரிய பாலம் பகுதியில் இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மகளிர் குழு சார்பாக கடன் வாங்கியுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஒவ்வொருவரும் தலா 49,910 ரூபாய் கடனாக பெற்ற நிலையில் வாரம் தோறும் தவறாமல் 500 ரூபாய் வீதம் செலுத்தியுள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களால் தவணைப் பணத்தை கட்டமுடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து நிறுவன ஊழியர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் கூறி சில மாதங்கள் அவகாசம் கொடுங்கள் நாங்கள் பணத்தை செலுத்தி விடுகிறோம் என மகளிர் சுய உதவிக் குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் இதனை ஏற்காத ராமகிருஷ்ணன் நேற்று பெண்களின் வீட்டிற்குச் சென்று வீட்டில் அமர்ந்து முழு நேரமும் காத்திருந்து பணம் கொடுத்தால் மட்டுமே நான் இங்கிருந்து செல்வேன் என வற்புறுத்தியுள்ளார்.

image

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகளிர் சுய உதவி குழு பெண்கள் இன்று குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது அங்கிருந்த காவலர்கள் நீங்கள் கடன் வாங்குவீர்கள் நாங்கள் விசாரிக்க வேண்டுமா?. மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு கொடுங்கள் என ஆத்திரத்தில் கூறியுள்ளனர்.


Advertisement

இதனால் விரக்தியடைந்த மகளிர் குழுவினர் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது பயிற்சி உதவி ஆய்வாளர் கருப்பசாமி மனுவை கொடுங்கள் விசாரிக்கிறோம் என கூறி மனுவை பெற்று அனுப்பி உள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement