த்ரிஷாவை மிரட்டிய மீராமிதுன்.. - கலாய்த்து தள்ளும் த்ரிஷா ரசிகர்கள்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாடல் அழகியும் நடிகையுமான மீரா மிதுன் நடிகை த்ரிஷாவை எச்சரித்த சம்பவம் த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செல்ஃபி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், களங்கமற்ற மனதின் நித்திய
சூரிய ஒளி! எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மீரா மிதுன் த்ரிஷாவின் அந்த செல்ஃபியையும், தனது மாடலிங்க் புகைப்படத்தையும்
பதிவிட்டு, த்ரிஷா தன்னை போலவே காப்பி அடிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement

image

மேலும் உங்களுக்கென ஒரு வாழ்க்கையைப் பெறுங்கள் எனக் கூறியுள்ள மீராமிதுன், தன்னைப்போல தோற்றமளிக்கும் ஃபோட்டோஷாப் செய்த
உங்கள் படத்தை பதிவிட்டால் கடுமையான சட்டரீதியிலான நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என்றும், இதுதான் கடைசி எச்சரிக்கை என்றும்
குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

image

மீராமிதுனின் இந்த பதிவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் கடுமையான கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். ''10 வருடங்களுக்கு மேலாக
சினிமாவில் ஜொலித்துவரும் த்ரிஷா, உங்களை காப்பி அடிக்கிறாரா என்ன இது காமெடி'' என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மீரா மிதுனை கலாய்க்கும் பல மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement