சசிகலா வெளியே வந்தால்..?: இரு அமைச்சர்களின் இருவேறு விளக்கம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்


Advertisement

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்நிலை பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

image


Advertisement

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ''சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். நான் சாதாரண மாவட்ட செயலாளர்” எனத் தெரிவித்தார். சசிகலாவின் விடுதலை அதிமுகவை அசைக்குமா என்ற பார்வை இருந்து வரும் நிலையில் அதிமுக அமைச்சரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து எனத் தெரிவித்துள்ளார். மேலும், ''அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை.

image


Advertisement

சசிகலா விவகாரத்தில் ஏற்கெனவே அதிமுக என்ன முடிவு எடுத்ததோ அதுதான் நாளையும் தொடரும். ஒரு குடும்பத்தை தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement