போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார் ரவுடி விகாஷ் துபே!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட ரவுடி விகாஷ் துபே போலீசார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்


Advertisement

உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளின் அராஜகம் அதிகரித்த நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கான்பூரில் ரவுடி கும்பல் ஒன்றைச் சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான விகாஷ் துபேவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர்

image


Advertisement

அதன்படி ரவுடி விகாஷ் துபே மத்திய பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி கோயிலுக்குச் சென்ற விகாஷ் துபேவை அங்குள்ள பாதுகாவலர்கள் அடையாளம் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்பு விகாஷ் துபேவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்நிலையில் இன்று விகாஷ் துபே போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரை அழைத்துச் செல்லும்போது கார் விபத்திற்குள்ளாகியதாக தெரிகிறது. அந்த சமயத்தில் காயமடைந்த போலீசார் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி சுடத் தொடங்கியுள்ளார். அத்துடன் அவர் தப்பிக்கவும் முயன்றுள்ளார், தப்ப முயன்றவரை போலீசார் சுட்டபோது அவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement