கோவை: கொரோனாவிற்கு ஒரே நாளில் 6 பேர் மரணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் ஒரே நாளில் கோவையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


Advertisement

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட வரதராஜபுரத்தை சேர்ந்த 43 வயது ஆண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய உடல் பாதிப்புகள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், சூலூர், கலங்கல் சாலை ஸ்ரீநகரை சேர்ந்த 58 வயதான ஆண் கடந்த 01-ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கும் சர்க்கரை நோய் மற்றும் மூச்சுக்குழாய் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

சென்னையில் விடிய விடிய மழை!! 

மேலும், கணபதி ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்த 72 வயதான மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கோவையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

இதைத்தவிர, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். கோவை ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில், கோவையை சேர்ந்த 3 பேர், திருப்பூரை சேர்ந்த 2 பேர் மற்றும் கரூரை சேர்ந்த 1 நபர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement