பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை கொரானாவால் உயிரிழப்பு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கொரானாவால் உயிரிழந்துள்ளது. 


Advertisement

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் 4 ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்தது. ஆனால், இன்று 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனைகளில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர். எவ்வித இணை நோய்களும் இல்லாத 7 பேர் கொரோனா பாதிப்புக்கு மட்டும் பலியாகியுள்ளனர்.


Advertisement

image

மாவட்ட வாரியாக பார்த்தால் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 23 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் 9 பேர் பலியாகியுள்ளனர். மதுரையில் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. செங்கல்பட்டில் 7 பேரும், திருவள்ளூர், திருச்சியில் 6 பேரும், ராமநாதபுரத்தில் 5 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில், பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கொரானாவால் உயிரிழந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு ஏற்கனவே 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த அந்தக் குழந்தை கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தை நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. அந்தக் குழந்தை நேற்று மதியம் 2.30 மணியளவில் இறந்தது.

இதனிடையே, கொரோனாவுக்கு இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 1,765 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1169 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா : 3,994 பேர் டிஸ்சார்ஜ்

loading...

Advertisement

Advertisement

Advertisement