“நீங்க மட்டும்தான் மாஸ்க் போடுவீங்களா..?” குரங்கின் சேட்டையான வீடியோ..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குரங்கு ஒன்று முகத்தை துணியால் மூடிக்கொண்டு செய்யும் சேட்டையான வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.


Advertisement

சமூக வலைத்தளங்களில் அவ்வவ்போது ஸ்வாரஸ்யமான வீடியோக்கள் பல ட்ரெண்டிங் ஆவது உண்டு. மக்களால் ரசிக்கப்படும் வீடியோக்களே ட்ரெண்டிங் ஆகும். யானைகள் செய்யும் சேட்டைகள், மனிதர்கள் செய்யும் சில நல்ல செயல் என பல விஷயங்கள் இப்படி ட்ரெண்ட் ஆகி வருகிறது. நேற்று கூட பெண் ஒருவர் பார்வையற்றவருக்காக ஓடி பிடித்து ஒரு பேருந்தினை நிறுத்தி அதில் அந்த பார்வையற்றவரை ஏற்றிவிட்ட வீடியோ வைரலாகி இருந்தது.

அந்த வகையில் குரங்கு செய்யும் சேட்டை வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஐ.எஃப்.எஸ் அதிகாரியான சுசந்தா நந்தா இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போதைய கொரோனா தொற்று காலத்தில் மாஸ்க் அணிவது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. தெருவில் நடமாடும் மனிதர்கள் அனைவரும் தங்களது முகத்தில் மாஸ்க் உடன் தான் செல்கிறார்கள். அப்படித்தான் மனிதர்களை பார்த்து கற்றுக் கொண்ட குரங்கு தானும் மாஸ்க் அணிய வேண்டுமென நினைத்திருக்கலாம். அப்படியொரு குரங்கு தனக்கு கிடைத்த துணியை கொண்டு மாஸ்க் போல் அதன் முகத்தை மறைப்பதுதான் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


Advertisement

அந்த வீடியோ க்ளிப்பில், சாலையின் ஓரத்தில் குரங்குகள் சில அமர்ந்து கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கின்றன. அதில் உள்ள ஒரு குரங்கின் கைகளில் துணி ஒன்று உள்ளது. அது அந்த துணியை எடுத்து முகத்தை ஸ்டைலாக மறைக்கிறது. பின்னர் மூடிய முகத்துடன் தட்டுத்தடுமாறி அங்கும் இங்கும் நடமாடுவது பார்ப்பதற்கு நகைச்சுவையாக உள்ளது. அதில் என்ன வித்தியாசம் என்றால், மனிதர்கள் மூக்கு வாய் போன்ற பகுதிகளை மட்டும் மறைக்கும் வகையில் மாஸ்க் அணிவார்கள். ஆனால், குரங்கு முகம் முழுக்க மறைத்துக் கொள்கிறது.


Advertisement

இந்த வீடியோ சுனந்த் நந்தா ட்விட்டரில் பதிவிட்ட உடனே வைரல் ஆகிவிட்டது. பலரும் இதனை ஷேர் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர். கொரோனா குறித்த விழிப்புணர்வு குரங்குகளிடமும் உள்ளது என சிலர் கிண்டலாக பதிவிட்டுள்ளனர். நாம் செய்வதை குரங்குகளும் அப்படியே செய்ய நினைக்கிறது என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். எப்படியோ குரங்கு செய்யும் அந்த சேட்டை பலரது இதயத்தையும் வென்றுவிட்டது.

image

ஊரடங்கு காலத்திலும் சென்னையில் இளைஞர்கள் பைக்ரேஸ் - வீடியோ!

loading...

Advertisement

Advertisement

Advertisement