என் மைனஸ் என்ன என்பதை கண்டுபிடித்து நீக்கியவர் கே.பாலச்சந்தர் - ரஜினிகாந்த்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தன்னிடமிருந்த மைனஸ் என்ன என்பதை கண்டுபிடித்து நீக்கியவர் கே.பாலச்சந்தர் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்


Advertisement

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று ரசிகர்களாலும், சினிமா துறையினராலும் கொண்டாடப்பட்ட கே.பாலச்சந்தரின் 90ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறுது. இந்நிலையில் அவரைப்பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கே.பாலச்சந்தர் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால் சிறிய நடிகனாக அல்லது வில்லன் நடிகராகவே சினிமாவில் இருந்து இருப்பேன் என்றும் பாலச்சந்தரால்தான் தற்போது பெரிய இடத்தை அடைந்து இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

தன்னிடமிருந்த மைனஸ் என்ன என்பதை கண்டுபிடித்து நீக்கியவர் கே.பாலச்சந்தர் என்றும். தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்ததன் மூலமாக மிகப்பெரிய இடத்தை தாம் அடைந்து இருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் பல இயக்குனர்களுடன் பணியாற்றி இருந்தாலும் படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் அளவிற்கு கே.பாலச்சந்தரிடம் மிகப்பெரிய கம்பீரம் இருந்ததாக ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். அவருடைய ஆன்மா எங்கு இருந்தாலும் அமைதியாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement