காஷ்மீர்: பாஜக பிரமுகர், அவரது தந்தை, சகோதரர் சுட்டுக்கொலை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஷ்மீரின் பாஜக பிரமுகர், அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.


Advertisement

காஷ்மீரின் வடக்கே அமைந்துள்ளது பந்திப்போரா மாவட்டம். இம்மாவட்டத்தின் பாஜக முன்னாள் தலைவர் வசீம் பாரி. அப்பகுதியின் முக்கிய பாஜக பிரமுகர் இவர். இவரது சகோதரர் உமர் சுல்தான் மற்றும் தந்தை பஷீர் அகமது ஆகியோர் அதே பகுதியில் கடை வைத்திருத்தனர். இந்நிலையில் நேற்று அவர்கள் கடையில் இருந்த நேரம் பார்த்து புகுந்த மர்மநபர்கள், 3 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.

image


Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த கொலையில் பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே வசீம் பாரிக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில் அவருக்கு 10 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பில் இருந்துள்ளனர். ஆனால் சம்பவ நடந்த நேரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் வசீம் பாரியின் கடைக்கே அருகேயுள்ள அவரது வீட்டில் இருந்துள்ளனர். பாதுகாப்பு இல்லாத நேரம் பார்த்து இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் கடமை தவறிய 10 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

image

காஷ்மீரில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி இந்த சம்பவத்தை தொலைபேசி மூலம் விசாரித்ததாகவும், பாரியின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ட்வீட் செய்துள்ளார்.


Advertisement

image

இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். மேலும், இது கட்சிக்கு பெரிய இழப்பு என்றும், அவர்களின் தியாகம் வீண் போகாது என்பதை நான் உறுதியளிக்கிறேன் எனவும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement