கொரோனா: 2 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க தமிழக சுகாதாரத்துறை திட்டம்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


Advertisement

கொரோனா பரவுவதைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் சிலர் அரசின் வலியுறுத்தல்களை மதிக்காததால் கடுமையான அபராதம் விதித்தல் போன்ற அடுத்தக்கட்ட நகர்வுகளுக்குள் அரசு சென்றுள்ளது.

image


Advertisement

அதன்படி, கொரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளார். இதன்படி, கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு அதிக அபராதம் விதிக்க அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கான சிகிச்சை மற்றும் கிருமிநாசினி செலவுகளுக்காக அபராதத் தொகையை பயன்படுத்தலாம் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

image


Advertisement

நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றிய நபரால் 20 நாட்களில் 90க்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதேபோல சேலத்திலும் விதிகளை மீறிய நபர்களால் பலருக்கும் தொற்று ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து கடும் அபராதத்தை விதித்தால் கொரோனா பரவலை தடுக்கலாம் என்று பொதுசுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது

loading...

Advertisement

Advertisement

Advertisement