ஒரே கிராமத்தில் ஆறு பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 46 குடும்பங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 நாகை அருகே ஒரே கிராமத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 46 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


Advertisement

 image

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த ஆறு பேருடன் தொடர்பில் இருந்த 46 குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வாழும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  


Advertisement

 image

அப்பகுதியைச் சுற்றி கிருமிநாசினி தெளித்த ஊராட்சி அதிகாரிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று அங்கிருப்பவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர். இது மட்டுமன்றி முதியோர் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளும் அவர்களின் வீட்டிற்கே கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement