''ஒலிம்பியா லைட்னிங் போல்ட்'' - செல்ல மகளின் புகைப்படத்தை உலகிற்கு பகிர்ந்த உசேன் போல்ட்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தன்னுடைய மனைவியான காசி பென்னட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள உசேன் போல்ட் தங்களுடைய செல்ல மகளின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


Advertisement

உலகின் அதிவேக‌ மனிதர் என்று அழைக்‌கப்படும் உசேன் போல்ட் 1986 ஆம் ஆண்டு ஜமைக்காவில் பிறந்தார். உலகம் வியந்து பார்க்கும் உச்சபட்ச சாதனைகள் பலவற்றை படைத்தவர்தான் இந்த மின்னல் வேக ஓட்டக்காரர். பத்து வினாடிக்குள் 100 மீட்டர் பந்தயத் தூரத்தைக் கடக்க பகலிரவாக இவர் மேற்கொண்ட பயிற்சிகள் பல.

image


Advertisement

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வதே பலருக்கும் எட்டாக்கனியாக இருக்க, இவரோ எட்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தை தட்டி சென்ற ஒரே வீரரும் இவர்தான். உலக அளவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள உசேன் போல்ட் அவரது செல்ல மகளை இந்த உலகிற்கு முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளார்.

இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக்கிற்கு தடை

image


Advertisement

தன்னுடைய மனைவியான காசி பென்னட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள உசேன் போல்ட் தங்களுடைய செல்ல மகளின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள உசேன் போல்ட், நமது மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் உடன் நாம் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம் என தெரிவித்துள்ளார். உசேன் போல்டின் இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் ''உங்களுடைய மகள் மிகவும் அழகு'' என்றும், ''இது ஒரு அழகான குடும்பம்'' எனவும் பதிவிட்டு வருகின்றனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement