ஓடும் காரிலிருந்து சீறிய விஷப் பாம்பு - நிறுத்தாமல் சண்டையிட்டு கொன்ற இளைஞர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் வாகனம் ஓட்டிக் கொண்ருந்த ஒருவரை விஷம் மிகுந்த பாம்பு ஒன்று தாக்கியதால் ஓடும் காரிலே அவர் அந்தப் பாம்புடன் சண்டையிட்டுள்ளார்.


Advertisement

 

27 வயது மதிக்கத்தக்க ஒருவர் குயின்ஸ்லாந்து நகர் நெடுஞ்சாலை ஒன்றில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரில் இருந்த அதிவிஷம் மிகுந்த பாம்பு ஒன்று அவரை கடித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சுதாரித்து கொண்ட அவர் வாகனத்தை நிறுத்துவதற்கு முயன்றுள்ளார். ஆனால், பாம்பானது அவரது காலைச் சுற்றியுள்ளது. அதன் பின்னர் கால்களுக்கிடையில் செருகி, அவர் உட்காந்திருந்த சீட்டையும் தாக்கியுள்ளது. இதனால் வாகனத்தை நிறுத்தித் தப்பிப்பதற்கும் வழியில்லை.


Advertisement

https://www.facebook.com/QueenslandPolice/videos/272362133987010/?t=0

இதனால் ஓடும் காரிலே சீட் பெல்ட் மற்றும் கத்தியைக் கொண்டு அவர் பாம்புடன் சண்டையிட்டுள்ளார். அவர் அப்போது நெடுஞ்சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தாகத் தெரிகிறது. இதனையடுத்து அவரை சேஸ் செய்த காவல் அதிகாரிகள் அவரின் காரை நிறுத்தினர். காவலரிடம் நடந்த சம்பவத்தைக் கூறிய அவர் மருத்துவமனைக்குச் செல்வதற்காகத்தான் இவ்வளவு வேகமாகச் சென்றதாகத் தெரிவித்தார். உடனே அவருக்குத் தேவையான மருத்துவ உதவிக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். காவல் அதிகாரிகள் அவரின் காரை அடைந்த போது பாம்பானது காரின் பின்பகுதியில் இருந்தது.
இது தொடர்பான வீடியோ ஒன்றையும் குயின்ஸ்லாந்து காவல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement